பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று இரவு IPL 2016 முதல் குவாலிபையர் சுற்று நடைபெற்றது. புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த குஜராத் லயன்ஸ் அணியும், 2-வது இடம் பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். களம் இறங்கிய பிஞ்ச் (4), மெக்கல்லம் (1), ரெய்னா (1) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த ஸ்மித் அதிரடியாக விளையாடி 41 பந்தில் 73 ரன்கள் குவித்தார். ஸ்மித் ஆட்டத்தால் குஜராத் லயன்ஸ் அணி 158 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.வாட்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பெங்களூரு அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் குல்கர்னி பௌலிங் இருந்தது. கோலி ரன் எடுகாமல் குல்கர்னி வசிய பந்தில் அவுட் ஆனார், கோலி டக் அவுட் ரசிகர்கள் எதிர்பாக்காத ஒன்று. கெய்ல் அவரது ஆட்டம் ஆட விடாமல் செய்தார் குல்கர்னி, குல்கர்னி ஒரு மெதுவாக பந்து ஒன்றை வீச கெய்ல் பொறுமை இழந்து சுற்றி பவுல்டு ஆனார். ராகுலு அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து வெளியேறினார். வாட்சன் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சச்சின் பேபி குல்கர்னி பந்தில் கேட்ச் கொடுத்து பூஜ்யம் ரன் எடுத்து வெளியேறினார். 6 ஓவரில் பெங்களூரு 29/5 என்ற ஸ்கோர் கணக்கில் தடுமாறியது. குல்கர்னி சிற்பக பந்து விசி மூன்று ஓவர்கள் எட்டு ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட் எடுத்தார்.
பெங்களூர் அணி தோற்றுவிடும் என்ற நிலையை டி வி்ல்லியர்ஸ் இருக்கிறார் என்று ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தனர். வில்லியர்ஸ் உடன் ஸ்டூவர்ட் பின்னி ஜோடி சேர்ந்தார். அடித்து அடிய பின்னி 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அப்துல்லா டி வில்லியர்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார். டி வில்லியர்ஸ் அடிக்கக்கூடிய பந்தை மட்டும் தேர்வு செய்து பவுண்டரி, சிக்சருக்கு விளாசினார். டி வில்லியர்ஸ் 46 பந்தில் 78 ரன்கள், அப்துல்லா 24 பந்தில் 31 ரன்கள் எடுத்தும் அவுட்டாகாமல் வெற்றிக்கு உதவினார்கள். பெங்களூர் அணி 18 ஓவரில் 156 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.