சென்னை

பால் அளவில் குறைபாடு இருந்தால் வேறு பாக்கெட்டுக்ள் வழங்க  ஆவின் நிறுவனம் முன் வந்துள்ளது.

ஆவின் பால் பாக்கெட்டை பொறுத்தவரை அதன் எடை மூலம் அளவு நிர்ணயம் செய்யப்படுகிறது.  அதன்படி ஆவின் பால் 500 மில்லி பாக்கெட் எடை சுமார் 517 கிராம் இருக்க வேண்டும்.   இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி வழங்கப்பட்ட பால் பாக்கெட் எடை குறைவாக இருந்துள்ளது. இது குறித்து பலரும் புகார் எழுப்பினர்.

ஆவின் நிர்வாகம் இது குறித்து அளித்துள்ள விளக்கத்தில்

“ஜூலை 30ம் தேதி வழங்கப்பட்ட ஒரே ஒரு பால் பாக்கெட் எடையின் அளவு மட்டுமே குறைவாக இருந்துள்ளது.  அது உடனடியாக வாடிக்கையாளர்க்கு மாற்றி வழங்கப்பட்டது. இனி நுகர்வோரின் நலம் பேணும் வகையில் தரத்துடன் கூடிய பால் விநியோகம்  செய்யப்படும். 

எப்போதாவது இயந்திர தொழில்நுட்பம் காரணமாக ஏதேனும் அளவு குறை இருப்பின் உடனடியாக நுகர்வோர்களுக்கு , அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்றுப் பால் பாக்கெட்டுகள் வழங்கப்படும்.   ஆவின் நுகர்வோருக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் 24 மணி சேவை கட்டணமில்லா எண்ணான 1800-425-3300 அல்லது aavincomplaints@gmail.comல் தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம்”

எனக் கூறப்பட்டுள்ளது.