சென்னை:
சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் பால்பண்ணையில் வேலை செய்து வரும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பலர் வேலைக்கு வருவதை தவிர்த்தனர். இதனால், சென்னையில் இன்று கடுமையான பால் தட்டுப்பாடு நிலவியது.

இதையடுத்து,  சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாட்டை தவிர்க்க சேலம், விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூரில் ஆகிய இடங்களிலிருந்து பால் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக ஆவின் பால் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மாதவரம் பால் பண்ணையில் இருந்து சென்னையின் புறநகர் பகுதிகள் திருச்சி, புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஆவின் பால் அனுப்பி வைக்கப்படுகிறது.  இந்த நிலையில் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பேக்கிங பிரிவில் வேலை செய்யும் தொழிலாளர்களில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பிரிவில் வேலை செய்த பல தொழிலாளர்கள் பணியை புறக்கணித்தனர். இதனால், ஆவின் பால் பேக்கிங் செய்து அனுப்புவதில் பிரச்சனை ஏற்பட்டது.
இதனால் இன்று சென்னையில் கடுமையான பால் தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து, மாதவரம் ஆவின் பால் பண்ணையில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து சென்னை மக்களின் பால் தேவையை பூர்த்தி செய்யசேலம், விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூரில் ஆகிய இடங்களிலிருந்து பால் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக ஆவின் பால் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.