சென்னை: கிறிஸ்துமல், புத்தாண்டு பண்டிகைகளையொட்டி, ஆவின் நிர்வாகம் கேக் தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளது. அதனப்டி 4 வகையான கேக் தயாரிக்கப்பட உள்ளது.
ஆவின் பால், தயிர் உள்பல பல்வேறு உணவுப்பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் ஆவின் நிர்வாகம், தீபாவளி பண்டிகையின் போது புதுவிதமான இனிப்புகளை சந்தைப்படுத்தியது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தள்ளது. இதையொட்டி, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகைகளை கருத்தில் கொண்டு 4 வகைகளில் கேக் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதனப்டி, கிறிஸ்துமஸ் கேக் என்று அழைக்கப்படும் பிளம் கேக்கும் அறிமுகமாகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஏதுவாக வெண்ணிலா, சாக்லெட் பிளேவர்களிலும் என 4 வகைகளில் கேக் அறிமுகம் செய்யும் பணியில் ஆவின் களமிறங்கி உள்ளது.
இந்த புதிய கேக் வகைகள் இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், புதிய முயற்சி மக்களிடையே வரவேற்பைப் பெறும் என்றும் ஆவின் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.