சென்னை
ஆவின் நிறுவனம் காகிதமில்லா மாதாந்திர பால் அட்டையை அறிமுகம் செய்துள்ளது.
தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) சமன்படுத்தப்பட்ட பால், நிலைப்படுத்தப்பட்ட பால், டிலைட் பால் மற்றும் நிறை கொழுப்பு பால் ஆகிய வகைகளைப் பால் அட்டை மூலம் நுகர்வோர்களுக்குக் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது.
இதில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் மாதாந்திர பால் அட்டை மூலம் நாளொன்றுக்கு சுமார் 4.75 லட்சம் லிட்டர் அளவில் பால் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பால் அட்டை விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலும் மற்றும் எளிய நடைமுறையில் காகிதமில்லா பால் அட்டையை ஆவின் அறிமுகம் செய்துள்ளது.
இதனால் ஆவின் வட்டார அலுவலகங்கள் மூலமாக இணையதளத்தில் பதிவு செய்து தரும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. மக்கள் இணையதளம் மூலமாகப் பதிவு செய்யும் போது அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு அந்த குறுஞ்செய்தியைச் சம்பந்தப்பட்ட ஆவின் டெப்போக்களில் காண்பித்து அவர்களுக்கு உண்டான பால் வகைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஆவின் பொதுமக்கள் அனைவரும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு ஆவின் வட்டார அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றும் மற்றும் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையவழி மூலமாகவும் மாதாந்திர பால் அட்டையை பெற்று பயனடையலாம் என்று தெரிவித்து உள்ளது.