சென்னை
ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
ஏற்கனவே 500 மிலி ஆவின் பால் பாக்கெட் விலை அதிகரித்தது தெரிந்ததே. தற்போது 5 லிட்டர் அளவு கொண்ட பச்சைப் பால் பாக்கெட் விலை ரூ.10 அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
நேற்று வரை 5 லிட்டர் பச்சை பாக்கெட் பால் ரூ.210க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று முதல் ரூ. 10 விலை உயர்ந்துள்ளது. தற்போது இதே பாக்கெட் ரூ.220க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வைத் தொடர்ந்து உணவகங்களில் காபி, டீ விலை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.