அக்மார்க் முத்திரை பயன்படுத்த ஆவின் நெய்க்குத் தடை

Must read

சென்னை

க்மார்க் முத்திரையை பயன்படுத்த ஆவின் நெய் உள்ளிட்ட 66 உணவுப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய வேளாண்துறையின் கீழ் செயல்படும் சந்தைப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு இயக்ககம் அக்மார்க் முத்திரை என்னும் தரச் சான்றிதழை வழங்கி வருகிறது.   இந்த முத்திரை விவசாயப் பண்ணைகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் கலப்படம் இல்லை என்பதற்கான சான்றிதழ் ஆகும். அரிசி, பருப்பு, தேன், எண்ணெய் போன்ற 225 பொருட்களுக்கு இந்த முத்திரை வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கும்  இந்த அக்மார்க் தரச்சான்றிதழை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.   ஆனால் ஆவின் உள்ளிட்ட 33 நிறுவனங்களைச் சேர்ந்த 66 உணவுப் பொருட்கள் சான்றிதழைப் புதுப்பிக்காததால் முத்திரையைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆவின் நிறுவனம் ஆவின் நெய்க்கான அக்மார்க் தரச்சான்றிதழ் காலாவதி ஆகவில்லை எனக் கூறி உள்ளது.  அத்துடன் இந்த சான்றிதழை புதுப்பிக்க 2023 ஆம் அண்டு வரை கால அவகாசம் உள்ளதால் இது குறித்து மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article