தில்லியில் உள்ள மறுகுடியமர்த்தப்பட்ட காலனிகளில் உள்ள மக்கள் இனி தானியங்கி-தண்ணீர் ஏ.டி.எம் களில், வெறும் 30 பைசா செலவில் தண்ணீர் பெறலாம். ஒருவர் ஒரு சமயத்தில் 20 லிட்டர் வரை தண்ணீர் பெறலாம். ஒதனை பெற, தில்லி தண்னீர் வாரியம் வழங்கும் ஒரு அட்டையை வாங்கிக் கொள்ளவேண்டும்.. அவ்வ போது பணத்தை ரீசார்ச் செய்துக் கொள்ளலாம்.
 
 

sarvajal
 
ஒவ்வொரு தண்ணீர் ஏ.டி.எம் மீதும் 400 லிட்டர் டேங்க் உள்ளது. தண்ணீர் அளவு குறைந்தவுடன் தானாய் செய்தி அனுப்பப்பட்டு மீண்டும் தண்ணீர் நிரப்பப் படும். இதற்கு க்ளவுட் கம்ப்யூட்டிங் எனும் தகவல் தொழிற்நுட்பம் பயன்படுத்தப் படுகின்றது.
தென்மேற்கு தில்லியில் உள்ள சாவ்தா கேவ்ரா எனும் பகுதியில் இதற்கென ஒரு ஆழ்துழாய் போர்வெல் அமைக்கப்பட்டு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு 15 ஏ.டி.எம் கள் மூலம் தண்ணீர் விற்கப் படுகின்றது.
அங்கு வசிக்கும் 7500 குடும்பங்களில் 850 குடும்பங்கள் இந்தச் சேவையினைப் பயன்படுத்தி வருகின்றனர் . பிரமல் ஃபவுண்டேசன் எனும் அமைப்பு இந்த தண்ணீர் ஏ.டி.எம் களை வைக்க ஏலம் எடுத்துள்ளது.
இந்தப் பகுதிகளில் குழாய் மூலம் தண்ணீர் சேவை இல்லை மற்றும் இங்குள்ள நிலத்தடி நீர் குடிக்க தகுதியற்றதாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
aap atm water
டில்லியில் இன்று ஆம் ஆத்மி அரசால் துவக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் ATM (மினரல் வாட்டர் ATM). 10 லிட்டர் மினரல் வாட்டர் மூன்று ரூபாய் மட்டும்.
இந்த தானியங்கி தண்ணீர் ஏ.டி.எம் கள் சூரியசக்தியில் இயங்குவது இதன் தனிச்சிறப்பு.
இந்த திட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து இதே போன்று 10 காலனிகளில் போர்வெல் அமைத்து தண்ணீர் ஏ.டி.எம் திறக்க திட்டக்கோப்புகளில்  தில்லி கவர்னர் கையெழுத்திட்டுள்ளார்.

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்