ஞ்சிம்

ம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஒருவர் தாம் பாஜகவுக்கு தாவ மாட்டேன் என பிரமாண பத்திரம் அளித்துள்ளார்.

 

டில்லி யூனியன் பிரதேச அரசை ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. இக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருக்கிறார். சமீபத்தில் இக்கட்சியின் இரு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடுத்தடுத்து பாஜகவில் இணைந்துள்ளனர். இது கட்சிக்கும் மக்களுக்கும் இடையே கடும் பரபரப்பை உண்டாக்கி வருகிறது.

கோவா மாநிலத்தின் பஞ்சிம் சட்டப்பேரவை தொகுதியில் இந்த மாதம் 19 ஆம் தேதி அன்று இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் வால்மீகி நாயக் என்பவர் போட்டி இடுகிறார். அவர் ஒரு புதுமையாக பாஜகவுக்கு மாற மாட்டேன் என முத்திரைத் தாளில் தன் புகைப்படத்துடன் பிரமாணம் பத்திரம் அளித்துள்ளார்.

அந்த பிரமாண பத்திரத்தில்,

கீழே கையொப்பம் இட்டுள்ள நான் பஞ்சிம் தொகுதியில் 2019 ஆம் வருடம் மே மாதம் 19 ஆம் தேதி நடைபெறும் இடைத் தேர்தலில் சட்டப்பேர்வை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால்,

1. நான் பாரதிய ஜனதா கசியில் இணைய மாட்டேன்

2. நான் பாஜக தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன்”

என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் கோவா மாநில சட்டபேரவையில் மகராஷ்டிர கோமாந்தக் கட்சியின் மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களில் இருவர் பாஜகவுக்கு மாறியது குறிப்பிடத்தக்கதாகும்.