சென்னை:
மிழக ஆளுநருக்கு இயக்குநர் அமீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக ஆளுநருக்கு இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைக்கும் வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராக களத்தில் நின்று வலுவாகப் போராடக் கூடிய மிக முக்கியமான அமைப்பாக அது விளங்குகிறது.

அந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும், தமிழ்நாட்டில் பாசிசத்தையும், வெறுப்புணர்வையும், மத அரசியலை விதைக்கும் முகமாகவே ஆளுநர் ரவி அவர்கள், SDPI-யின் மீது பொய்யான தகவல்களை சொல்லியிருக்கிறார்.

எனவே, இது மாதிரியான வெறுப்புணர்வை விதைக்கும் பேச்சுகளை ஆளுநரோ, அரசியல் தலைமைகளோ பேசுவதை கைவிட்டு, தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள்.! என்ற கோரிக்கையை அன்போடு முன் வைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.