டெல்லி: திகாரில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் கேஜரிவாலை அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும், கேஜரிவாலின் மன உறுதியை உடைக்க முயற்சி நடக்கிறது என ஆம்ஆத்மி எம்பி. சஞ்சய் சிங் குற்றம் சாட்டி உள்ளார்.

மதுபான கொள்கை ஊழல் காரணமாக, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக ஏற்கனவே முன்னாள் துணைமுதல்வர் சிசோடியா உள்பட பல ஆத்ஆத்மி தலைவர்கள், மற்றும் தெலுங்கான முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், சிறையில் உள்ள கெஜ்ரிவாலை சந்திக்க, அவரது குடும்பத்தினர், வழக்கறிஞர் என சிலர் சந்திக்க  நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கி உள்ளது.

இந்த நிலையில், திகார் சிறையில் உள்ள முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது குடும்பத்தினரைச் சந்திக்கவும் அனுமதி மறுக்கப்படுவதாக மக்களவை எம்.பி. சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். சிறையில் இருக்கும் போது அவரது குடும்பத்தினர் மற்றும் வயதான பெற்றோரின் உடல்நிலை குறித்து முதல்வர் அறிய அனுமதிக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் சிங்,  முதல்வர் கேஜரிவாலின் மன உறுதியை உடைக்க பாஜக முயற்சி செய்து வருவதாக கூறியவர், அவரை சந்திக்க  அவரது குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றார். மேலும்,  கெஜ்ரிவாலை சந்திக்க  நேரில் சந்திக்க  “முலாகட் ஜங்லா” வழியாக மட்டுமே சந்திக்க அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்தவர், எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும் குடும்பத்தினரை நேரில் சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள்… ஆனால்,  ஒரு மாநில முதல்வரை சந்திக்க    “முலாகட் ஜங்லா” வழியாக அனுமதி கொடுப்பது சரியல்ல என்றார். (“முலகட் ஜங்கலா” என்பது திகார் சிறைக்குள் இருக்கும் ஒரு அறையில், கைதிகளை பார்வையாளர்கள் சந்திக்கும்  இடமாகும் – இதில் ஏராளமான குற்றவாளிகளும், அவர்களின் உறவினர்கள் மொத்தமாக சந்திக்கும்போது, முறையாக பேச முடியாது)

மேலும் வரும் 15ந்தேதி சிறையில் உள்ள  கேஜரிவாலை சந்திக்கப் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் திட்டமிட்டிருந்தார்.  ஆனால்,  சிறை நிர்வாகம், அவர்,  முலகத் ஜங்லாவில் ஒரு சாதாரண பார்வையாளராக மட்டுமே அவரை சந்திக்க முடியும் என்று கூறியுள்ளது. இது மனிதாபிமானமற்ற செயல் என்றும் சாடினார்.

அவர் கூறியுள்ளார். முன்னதாக, செவ்வாய்க்கிழமை திகார் சிறையில் தனது மனைவி சுனிதா, செயலாளர் பிபவ் குமார் ஆகியோர் முதல்வர் சந்தித்தார். கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.