ஆதர்ஷ சித்ராலயா தயாரிப்பு நிறுவனம் சார்பில் சத்யா பிரபாஸ் தயாரிக்கும் ‘சிவுடு’ என்ற தெலுங்கு படத்தில் நடிகர் ஆதி நடிக்கிறார் .

இப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்குகிறார் .

ஜெய் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.இந்தப் படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடிக்க நடிகை நிக்கி கல்ராணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆதி – நிக்கி கல்ராணி ஜோடி யாகவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.