தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக உள்ள ஜான் ஆரோக்கியசாமியை மாற்ற அக்கட்சியின் தலைவர் விஜய் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜான் ஆரோக்கியசாமி மீது மாற்று கட்சியினர் த.வெ.க.வில் இணைவதற்கு தடையாக இருப்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் கட்சி நிர்வாகி ஒருவருடன் ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து அரசியல் ஆலோசகராக உள்ள ஜான் ஆரோக்கியசாமியை மாற்ற விஜய் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, த.வெ.க.வின் அரசியல் ஆலோசகராக வாய்ஸ் ஆப் காமன்ஸ் எனும் அரசியல் வியூக நிறுவனத்தை நடத்தி வரும் ஆதவ் அர்ஜுனாவை நியமிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய்யை வைத்து புத்தகம் வெளியிட்ட ஆதவ் அர்ஜுனா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து வி.சி.க.வில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனா தற்போது விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைய இருப்பதாக தகவல் கசிய விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.