திருமலை,

திருப்பதியில் விஐபி சாமி தரிசனத்துக்கு வரும் ஜனவரி 1ந்தேதி முதல் ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் 23ம் தேதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான  இணை செயல் அலுவலர் கூறியதாவது,

வரும் 2018ம் ஆண்டு  ஜனவரி மாதம் 1 ம் தேதி முதல் விஐபி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம் என்றும்,  அதே நேரத்தில் இம்மாதம் 23 ம் தேதி முதல் தொடர் விடுமுறை மற்றும் புத்தாண்டு வர இருப்பதால், என்பதால் ஜனவரி முதல் வாரம் வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வும் கூறி உள்ளார்.

விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம்  அதிகமாக இருக்கும் என்பதால், விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும், லட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தான  இணை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.