சென்னை: பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ஆதார் கட்டாயம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், கடந்த 1992ம் ஆண்டு அப்போதை முதலமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு குழந்தைக்கும் கல்விக்கான உரிமை அளிக்கப்பட்டு, ஏழை குடும்பத்திற்கு சில சரிபார்க்கத்தக்க நிபந்தனைகளுடன் ஊக்கத் தொகையுடன் கூடிய வைப்புத் தொகை 18 வயது முடிவில் அளிக்கும்வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 1992 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் தற்போது ஒவ்வொரு குழந்தைக்கும் கல்விக்கான உரிமை அளிக்கப்பட்டு, ஏழை குடும்பத்திற்கு சில சரிபார்க்கத்தக்க நிபந்தனைகளுடன் ஊக்கத் தொகையுடன் கூடிய வைப்புத் தொகை 18 வயது முடிவில் அளிக்கும்வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது பிறகோ பிறந்து, குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை மட்டும் இருப்பின் அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையான ரூ.50,000/- தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது பெண் குழந்தையின் பெயரில் வழங்கப்படுகிறது.
1 பெண் குழந்தை 01.08.2011 க்கு முன்பு பிறந்த குழந்தை எனில் ரூ.25,000/- 1 பெண் குழந்தை 01.08.2011 க்கு பின்பு பிறந்த குழந்தை எனில் ரூ.50,000/- வழங்கப்படும். மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டிலும் புதுப்பிக்கப்பட்டு, 18 வயது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடனும், கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்து, குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தையின்பேரிலும் நிலையான வைப்புத் தொகையாக தலா ரூ.25,000/- தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது நகல், பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படும்.
மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடன், கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய நிலை வைப்புத் தொகையின் முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.
பெற்றோரில் ஒருவர் 35 வயதிற்குள் அரசாங்க மருத்துவமனையில் கருத்தடை செய்ததற்கான சான்று அளிக்க வேண்டும். பெண் குழந்தை மட்டுமே இருக்க வேண்டும். ஆண் வாரிசு இருக்கக் கூடாது. வருமானச் சான்று ரூ.72,000/-க்குள் இருக்க வேண்டும். இரண்டாவது குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பல கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயனாளிகள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகளின் பெயரில் ரூ. 50,000 வைப்பு நிதியாக தமிழ்நாடு மின் விசை நிதி நிறுவனத்தில் வைக்கப்படுகிறது. இரு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ. 25,000 வீதம் வைப்பு நிதி செலுத்தப்படுகிறது என்று முதலமைச்சர் கூறியுள்ளார்