டில்லி,
ஆதார் எணப்படும் தனிநபரின் அடையாள எண்களில் இணையதளங்களில் வெளியாகி வருவது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது அரசின் பாதுகாப்பற்ற தன்மையை உறுதி செய்வதாக தெரிகிறது.
இந்தியாவில் ஆதார் வைத்திருப்போர்களில் சுமார் 13.5 கோடி பேரின் தகவல்கள் மீண்டும் இணையதளங்களில் வெளியாகி உள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
ஆதார் எண் என்பது ஒவ்வொரு தனி நபருக்கு வழங்கப்படும் தனித்துவமானத எண்ணாகும். இது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். வங்கி சேவை, செல்பேசி இணைப்பு மற்றும் பிற அரசு மற்றும் அரசு சாரா சேவைகளை பெற ஆதார் எண் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
12 இலக்கு எண் கொண்ட தனிநபர் அடையாள எண் ஆகும். இந்தியா முழுவமும் பயன்படும் இந்த அட்டையின் மூலம் அனைத்துவிதமான அரசு சேவைகளை பெற முடியும்.
ஆனால் தற்போது இந்த தனிநபரின் ஆதார் எண்களில் இணையதளங்களில் வெளியாவது அதிகரித்து வருகிறது.
வங்கிகள் பயன்பாடு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்காக ஆதார் எண்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில், தேசிய வேலை வாய்ப்பு உறுதித்திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் ஆதார் எண்கள் பயன்படுத்தப்பட்டு வரும் 13 கோடி ஆதார் எண்கள் இணையத்தில் எளிதில் மற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் இருப்பதோடு சுமார் 10 கோடி வங்கி பயணர்களின் பதிவெண்களும் எளிதில் பயன்படுத்தப்படும் வகையில் இணையத்தில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக விரோதிகள் இதனை பயன்படுத்தி பொருளாதார குற்றங்களில் எளிதாக ஈடுபட முடியும். ஆனால், மத்திய அரசோ ஆதார் குறித்த தகவல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ஆதார் எண்கள் பாதுகாப்பற்ற முறையில் இணையத்தில் வெளியாகி இருப்பது அரசின் பாதுகாப்பு குறித்த நம்பகத்தன்மை மீது கேள்வியை எழுப்பியுள்ளது.
இதுவரை வெளியாகி உள்ள ஆதார் குறித்த தகவல்கள்:
மத்திய அமைச்சகத்தின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு துறையின் கீழ் உள்ள பிரதான் மன்டி அவாஸ் யோஜனா (PMAY) திட்ட பயனாளிகளின் ஆதார் எண்கள் அத்துறையின் வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்ததாக, குஜராத் அரசாங்கத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை யதளத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களின், பெயர்கள், முகவரிகள் மற்றும் ஆதார் எண்கள் அடங்கிய ஆவணங்கள் அனைவரும் காணும் வகையில் பகிரங்கமாக வெளியிடப்பட்டது. அதில் பல மாணவர்களின் ஆதார் எண்கள், அவர்களது பெயர், முகவரி, மொபைல் போன் எண், பெற்றோரின் பெயர்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் அவர்கள் படிக்கும் நிறுவனங்களின் பெயர்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
சண்டிகரில் PDS பயனாளிகளின் ஆதார் எண், நீர் மற்றும் சுத்திகரிப்பு அமைச்சின் கீழ் ஸ்வத் பாரத் மிஷன் பயனாளிகளின் ப்ரோவிடென்ட் ஃபண்ட், மற்றும் ஜார்கண்ட் அரசாங்கத்தால் வழங்கப்படும் ஓய்வூதியத்தை பெரும் லட்சக்கணக்கானோர் குறித்த தகவல் ஆகியன அந்த துறைகளின் வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற தகவல்களை வெளியிட்ட அரசு இணையதளங்களின் பட்டியலில் பஞ்சாப் சிறு பான்மை நலத்துறை, பீகார் சிறுபான்மை நலத்துறை, மகாத்மா ஜோதிபா பூலே தெலுங்கானா பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கேரளா கல்வி ஊக்கத்தொகை, காதி மற்றும் கிராம தொழிற்சாலை ஆணையம், கேரளா முதியோர் உதவித்தொகை தளம் ஆகிய இணையதளங்கள் அடக்கம்.
ஆதார் தகவல்களை வெளியிட்ட இணையதளங்களில் பல இணையதளங்களை சார்ந்த துறை களுக்கு இந்த தகவல் கசிவு குறித்து தகவல் அளிக்கப்பட்டாலும் அவை இன்னும் சரி செய்யப்படாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அரசு வலைதளங்களில் ஆதார் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருவது பொதுமக்களை அச்சத்துக்குள்ளாகி உள்ளது. இது மத்திய அரசின் பாதுகாப்பற்றத் தன்மையை உறுதிப்படுத்து வதாக உள்ளது.