சென்னை: தமிழ்நாட்டில் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும்‘ 3,724 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. அது தொடர்பான விவரப்பட்டி மாவட்ட வாரியாக பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,79,696 ஆக உயர்ந்துள்ளது.அதே வேளையில் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர்ல மொத்த எண்ணிக்கை 24,08,886 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,619 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில்,
கொரோனா பாதிப்புடன் 38,191 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் அதிகம்
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மாநிலம் முழுவதும் 3724 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது.
தஞ்சாவூரில் தான் 221 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனியில் அதிகபட்சமாக 200, நீலகிரியில் 144, தூத்துக்குடியில் 142, திருவாரூர் மற்றும் தென்காசியில் 117 என மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.