ஒரு கல் – ஒரு கண்ணாடி – ஒரு அரசியல் – ஒரு அப்பாவிக்கு ஆபத்து

Must read

மூத்த பத்திரிகையாளர்  என். சுந்தரபுத்தன் (Natarajan Sundharabuddhan) அவர்களின் முகநூல் பதிவு:
download
“புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக வைத்திலிங்கம், நமச்சிவாயம் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது வீட்டின் முன்பும் ஆர்ப்பாட்டம் செய்தனர் என்ற செய்தியை படித்துவிட்டு நகர்ந்துவிட்டேன்.
ஆனால் அந்த செய்திக்குப் பின்னால் நடந்த பேராபத்தை கேள்விப்பட்டு கவலையுற்றேன். அந்தப் போராட்டத்திற்கும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் திருவாரூருக்கு 14 ஆம் எண் சீட்டில் உட்கார்ந்து பயணம் செய்தவருக்கும் என்ன தொடர்பு?

அந்த தனியார் பேருந்து புதுச்சேரி வழியாக செல்லும்போது போராட்டக்காரர்கள் கோபத்தில் வீசியெறிந்த கல் பேருந்தின் முகப்பு கண்ணாடி வழியாக வேகமாக பாய்ந்து அந்த நண்பரின் தலையை தாக்கியது.
மூளைக்கு அருகில் சென்று பெரும் சேதம் விளைவித்துவிட்டது. பின்னர் புதுச்சேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சென்னை குளோபல் மருத்துவமனைக்கு உடனடியாக மாற்றப்பட்டார். உயிர் பிழைக்கமாட்டார் என்ற நிலையில், தீவிர சிகிச்சைக்குப் பிறகு கோமா நிலையில் இருந்து மீண்டிருக்கிறார். இதுவரை மருத்துவச் செலவு 12 லட்சம் ரூபாய்.
பாதிக்கப்பட்டவர், என் நண்பர் ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர்.
கூட்டுறவுத் துறையில் செயலராகப் பணியாற்றுகிறார். ரொம்பவும் அமைதியானவர். யாரோ நடத்திய போராட்டம் அந்த எளிய மனிதரின் உயிருக்கே உலைவைக்கும் அளவுக்குச் சென்றுவிட்டதை யார் அறிவார்?
ஒரு செய்திதான். ஆனால்…?

More articles

Latest article