‘சிங்கப்பெண்ணே’ ; நாட்டில் உள்ள அனைத்து மகள்களுக்கும் சமர்ப்பணம் : அர்ச்சனா கல்பாத்தி

Must read

அட்லீ இயக்கத்தில் , விஜய் நயன்தாரா நடிப்பில் , ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் பிகில் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ளது. கால்பந்து விளையாட்டு கதையை மையப்படுத்திய இப்படத்தில் விஜய், அப்பா (பிகில்) மற்றும் மகன் (மைக்கெல்) என்று இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

விஜய் நயன்தாராவுடன் இணைந்து ஜாக்கி ஷ்ரூப், டேனியல் பாலாஜி, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், விவேக், கதிர், பூவையார், ஐ.எம்.விஜயன், யோகி பாபு ஆகிய பலர் நடித்துள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தொடர்ந்து 2ஆவது மற்றும் 3ஆவது லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கப் பெண்ணே என்ற பாடல் லிரிக் வீடியோ சமூக வலைதளங்களில் லீக் ஆனது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் ஹே புள்ள மற்றும் வெறித்தனம் ஆகிய பாடல்களும் அடுத்தடுத்து லீக்கானதாக பாடல் வீடியோ வெளியானது. ஆனால், இதற்கு தயாரிப்பு தரப்பில் இருந்து எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில், தயாரிப்பு தரப்பில் இருந்து இன்று ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 23ம் தேதி பிகில் படத்தின் முதல் சிங்கிள் சிங்கப்பெண்ணே பாடல் லிரிக் வீடியோ வெளியாகும் என்று அறிவித்துள்ளது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து மகள்களுக்கும் இந்தப் பாடல் சமர்ப்பணம் என்று அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

More articles

Latest article