சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சமூக விரோத செயல்கள் அதிகரித்து காணப்படுகிறது. அரசியல் மற்றும் போதையால் கொலை, கொள்ளை, ஜாதிய மோதல்கள், போதைபொருள் கடத்தல், விற்பனை போன்றவை சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக யாரேனும் விமர்சித்தால் அவர்கள் தாக்குதலுக்கு ஆளாவதும் தொடர்கதையாகிறது. இதனால், யாரும் புகார் மறுத்து வருகின்றனர். இதுபோன்ற சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டிய காவல்துறை, ஆட்சியாளர்களின் ஏவல் துறையாக செயல்படுகிறது.
காவல்துறை முறையான நடவடிக்கை எடுப்பதாக கூறி வந்தாலும், பல அரசியல் கொலைகளில் திமுகவினர் உள்பட பலர் சிக்கியிருப்பதும் தெரிய வந்துள்ளது. சாதாரண குற்றவாளிகளின் கை, கால்களை உடைத்து பயத்தை ஏற்படுத்தும் காவல்துறையினர், அரசியல் கொலை போன்ற முக்கிய கொலை மற்றும் கடத்தல் சம்பவங்களில் கைது செய்யப்படும் குற்றவாளிகள், போதை பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்கி வருகின்றனர். இது காவல்துறையினர் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இதன் தொடர்ச்சியாகவே, சென்னையில் பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டார். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதுடன், காவல்துறை மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சென்னை மாநகர காவல்ஆணையர் மாற்றப்பட்டு, புதிய ஆணையர் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண் உள்பட முக்கிய காவல்துறை அதிகாரிகள் மற்றும், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், கூடுதல் காவல்துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனையில் சட்டம் ஒழுங்கு குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 31 நாட்களில் 133 படுகொலைகள்! சீமான் பகீர் குற்றச்சாட்டு…