சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி காலமானார்.

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, கேன்சர் பாதிப்பு காரணமாக கடந்த ஆறு மாதமாக எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில வாரங்களாக அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதை அடுத்து, தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி காலமானார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி காலமானதற்கு தயாநிதிமாறன் எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திமுக துணைபொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா எம்.பி.,யின் துணைவியார் பரமேஸ்வரி மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன், அவர்களை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]