உன்னி கிருஷ்ணன் இயக்கும் ‘ஆராட்டு’ என்ற படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
மெல்லிய நகைச்சுவை கலந்த இந்த ஆக்ஷன் படம் மூலம் ஷரத்தா ஸ்ரீநாத், மலையாளத்தில் அறிமுகம் ஆகிறார்.
ஒட்டப்பாலம், ஊட்டி ஆகிய இடங்களில் இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
இந்த படத்தில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சிறப்பு வேடத்தில் நடித்து வருகிறார்.

மோகன்லால்- ஏ.ஆர்.ரஹ்மான் – உன்னி கிருஷ்ணன் ஆகியோர் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட போட்டோ வெளியாகியுள்ளது.
நெடுமுடி வேணு, சாய்குமார், ஷீலா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
நெய்யாற்றின்கரை கோபன் என்ற கேரக்டரில் மோகன்லால் நடிக்கிறார்.
இந்த படத்துக்கு ரஹ்மான் இசை அமைக்கவில்லை.
ராகுல்ராஜ் என்பவர் இசை அமைக்கிறார்.
‘புலி முருகன்’ புகழ் உதய கிருஷ்ணா, ‘ஆராட்டு’ படத்தின் கதையை எழுதியுள்ளார்.
“ஏ.ஆர்.ரஹ்மானுடன் நடிப்பது பெருமையான விஷயம்” என மோகன்லால் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆகிறது.
– பா. பாரதி
[youtube-feed feed=1]