
சென்னை
ரஜினிகாந்த் அரசியலுக்க்கு வருவதற்கு இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்
ஏ ஆர் ரகுமான் இந்தியாவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளர். தமிழ் நாட்டை சேர்ந்த இவர் ஆஸ்கார் விருது பெற்று நமது இந்தியாவுக்கு புகழ் சேர்த்தவர். இன்று சென்னையில் ரகுமான் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.
அப்போது அவர் செய்தியாளரிகளின் கேள்விகளுக்கு, “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்மிக அரசியல் என்றால் என்ன அர்த்தம் என்பது ரஜினிக்கு தெரியும். சென்னை ஒரு கலாச்சார தலைநகராக விளங்க வேண்டும் எபதே எனது விருப்பம்” என பதிலளித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel