டில்லி
பாஜக ஆதரவாளரான மோகன் தாஸ் பை மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவின் டிவிட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மிகப் பெரிய ஆதரவாளர் என கூறப்படும் மோகன் தாஸ் பை என்பவர் மோடி கடந்த 2004 ஆம் வருடம் மோடி ஆட்சியை பிடித்ததில் இருந்தே ஆட்சியை புகழ்ந்து வருகிறார். இவர் பிஜேபி மீது தமக்குறிய பிடிப்பு காரணமாக கட்சியை புகழ்ந்தும் காங்கிரஸை தாக்கியும் தொடர்ந்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார். பல சர்வதேச ஊடகங்கள் இது குறித்து விமர்சித்துள்ளன.
சமீபத்தில் தாக்கல் செய்யபப்ட்ட நிதிநிலை அறிக்கையில் ரூ.2-5 கோடி வருமானம் உள்ளவர்கள் கூடுதலாக 3% வருமான வரி மற்றும் சர்சார்ஜ் 20% செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். முன்பு இந்த சர்சார்ஜ் 15% ஆக இருந்தது. அதைப் போல் ரூ. 5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் தற்போதுள்ள 15% சர்சார்ஜுக்கு பதில் 37% சர்சார்ஜ் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதை ஒட்டி மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ டிவிட்டரில், “பட்ஜெட்டில் வரி விகிதம் குறித்த ஸ்னாப் ஷாட் பகிரப்பட்டுள்ளது. மிகப் பெரிய செல்வந்தர்கள் பலருக்கு தர்மம் அல்லது சமூக பணி செய்ய நேரம் இருப்பதில்லை. ஆனால் தற்போது உதவிகள் தேவையானவர்களுக்கு இந்த வரி விதிப்பு மூலம் பணி செய்ய முடிந்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினர் இதன் உண்மை தன்மையை உணராமல் அதிக வரி விதித்துள்ளதாக கூறுகின்றனர்” என பதிந்துள்ளார்.
இந்த டிவிட்டை கண்ட மோகன் தாஸ் பை தனது டிவிட்டரில், “திரு சுப்ரியோ பாதல், இது மிகவும் முட்டாள் தனமானது. நிறைய பொருள் ஈட்டுபவர்கள் நிறைய தர்மம் செய்கின்றனர். உங்களுடைய இத்தகைய விமர்சனங்கள் அவர்களுக்குதேவையில்லை. நீங்கள் சரியாக வருமான வரி செலுத்துவோர் மனதை புன்படுத்துகிறீர்கள், இது போல் வரி செலுத்தாமல் மக்களை தடுப்பது சரியா? அவமானம்!” என பதிந்துள்ளார்.
ஆனால் பாஜக தலைமையுடன் மோகன் தாஸ் பைக்கு மிகவும் நெருக்கம் உள்ளதால் இதற்கு அமைச்சர் பதிலளிக்கவில்லை என மக்கள் கருதுகின்றனர்.