சென்னை,

மிழகம் முழுவதும் ஓபிஎஸ் அணியினர்  ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதி விசாரணை கோரி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரதத்தில் முன்னாள் முதல்வர்  ஓபிஎஸ், மது சூதனன், பி.எச்.பாண்டியன், மைத்ரேயன் எம்பி உற்பட பல மூத்த தலைவர்களும், பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

உண்ணாவிரதம் இருப்பவர்களை திரையுலகினர், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் வாழ்த்தி வருகின்றனர்.  அகில இந்திய முவேந்தர் முன்னணி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், ஓபிஎஸ் உண்ணாவிரதம் இருக்கும் விழா மேடைக்கு வந்து, உண்ணாவிரதம் இருப்பவர்களை வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

உண்ணாவிரதம் இருப்பவர்களின் நோக்கம் வெற்றிபெற வாழ்த்துவதாக கூறிய சேதுராமன், சசிகலாவின் கணவர் குறித்த பகிர் தகவலை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார்.

“ஏழு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு  பத்திரிகையாளர் சந்திப்பின்போது, சிறையில் இருக்கும் சசிகலாவின்  கணவர் நடராஜன்  அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை  செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார் என்று கூறினார்.

அப்போது, இன்னும் இரண்டு மாதத்தில் நாங்கள்தான் சிஎம், நாங்கள் சிஎம்- ஆக  ஒரு தலையணை போதும் என்று கூறியுள்ளார். அவரது பேச்சைக்கேட்ட செய்தியாளர்கள் ஆடிப்போய்விட்டனர் என்றும், மேலும், தற்போதுதான் தேர்தல் நடந்துள்ளது. இதற்கு  நான்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ஆனால், ‘எங்களுக்கு கோடியெல்லாம் ஒரு பிரச்னையே அல்ல. நாங்கள் நினைத்தால் சிஎம் ஆகிவிடுவோம் என்றும் கூறியுள்ளார்.

நடராஜனின் இந்த அபாயகரமான பேச்சு, அவருக்கு நெருக்கமான செய்தியாளர்களையே  அதிர்ச்சியடை வைத்துள்ளது என்றும் சேதுராமன் கூறியுள்ளார்.

சேதுராமனின் இந்த பகிர் தகவல் உண்ணாவிரதம் இருந்துவரும் அதிமுக தொண்டர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.