கார்த்தி மற்றும் நாகார்ஜூனா நடித்து வெளிவந்த தோழா படத்தில் கார்த்தியின் தாறுமாறான கிறுக்கலை நாகார்ஜூனா வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்த மார்டன் ஆர்ட் என்று பிரகாஷ்ராஜிடம் சொல்லவே அதை நம்பி அவர் பல லட்சங்கள் கொடுத்து அந்த கிறுக்கலை வாங்கிச் சென்று, அந்த மார்டன் ஆர்ட்டில்(!) புதைந்திருக்கும் பொருள் என்ன என்று கார்த்தியிடமே விளக்குவார். இது போன்ற சம்பவமொன்று சமீபத்தில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ ஆர்ட் மியூசியத்தில் நடந்திருக்கிறது.
அந்த மியூசியத்தில் ஏராளமான மார்டன் ஆர்ட்களும், கலைப்பொருட்களும் இடம்பெற்றிருக்கின்றன. அதை பலரும் வந்து பார்த்து வியந்தவண்ணம் செல்கின்றன. ஒரு மார்டன் ஆர்ட்டை காட்டி இதன் பொருள் என்னவென்று கேட்டால் ஒவ்வொருவரும் அவரவர் பார்வைக்கு தகுந்தமாதிரி விளக்கம் சொல்வர்.
இவர்களை கலாய்க்க விரும்பிய டி.ஜே.கயட்டான் என்ற 17 வயது குறும்புக்கார இளைஞர் மியூசியத்தின் ஒரு முக்கியமான இடத்தில் ஒரு மூக்குக்கண்ணாடியை போட்டு வைக்கவே அந்த இடத்தை கொஞ்ச நேரத்தில் மக்கள் சூழ்ந்துகொண்டனர். சிலர் அந்த கண்ணாடியை மிக சிறந்த கலைப்பொருள் என்று நம்பி போட்டோக்கள் எடுக்கவும் தொடங்கினர். சிலர் அதற்கு பின்னால் இருக்கும் கலை இதுதான் என்று விளக்கம் கொடுக்கவும் தொடங்கியிருக்கிறார்கள்
இதை கயட்டான் தனது ட்விட்டரின் வெளியிடவே அதை இதுவரை 66 ஆயிரம் ரீட்வீட் செய்திருக்கிறார்கள். இந்த இளைஞர் இதே போல சில சேட்டைகளை இதற்கு முன்பாகவும் செய்திருக்கிறாராம்