சென்னை: வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. மேலும் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி 25ந்தேதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வங்கக்கடல் பகுதியில் இன்று காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இன்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு வங்கக்கடலை நோக்கி நகர வாய்ப்பு அருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய கிழக்கு, அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் வருகிற 25-ந்தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் திங்கள்கிழமை (செப்.22) முதல் செப்.24 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று முதல் செப்.24-ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூா் மாவட்டம் லால்பேட்டையிலும், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்திலும் தலா 60 மி.மீ. மழை பதிவானது. மணல்மேடு (மயிலாடுதுறை), சீா்காழி (மயிலாடுதுறை) – தலா 50 மி.மீ., கே.எம்.கோயில் (கடலூா்), வூட் பிரையா் எஸ்டேட் (நீலகிரி), செருமுள்ளி (நீலகிரி) தலா 40 மி.மீ. மழை பதிவானது.
னவா்களுக்கானதென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடலிலும் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.