பாரிஸ்

பாரிஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு அருங்காட்சியகத்தை காண வருபவர்கள் நிர்வாணமாக வர அனுமதிக்கப்படுகின்றனர்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் ”பலைஸ் டி டோக்யோ” என்னும் கலை அருங்காட்சியகம் ஒன்று உள்ளது.   கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் இயற்கை ஓவியங்கள் பல வைக்கப்பட்டுள்ளன.   இயற்கை ஆர்வலர்கள் பலரும் இந்த அருங்காட்சியகத்தை காண வந்துள்ளனர்.

இயற்கை ஆர்வலர்கள்  ஆடைகள் அணிவதை எதிர்ப்பவர்கள்.   அதுவே இயற்கை வாழ்க்கை முறையாக கருதுகின்றனர்.    அதனால் இந்த அருங்காட்சியகத்தை காண வருபவரும் இவர்கள் நிர்வாணமாக  வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இப்படி சுமார் 100 க்கும் மேற்பட்டோர் இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர். .

கடந்த 2013 ஆம் வருடம் இந்த இயற்கை ஆர்வலர்கள் வியன்னாவில் ஆண்கள் நிர்வாண ஓவியக் கண்காட்சி ஒன்றை நடத்தினார்கள்.   அப்போது பார்வையாளர்கள் நிர்வாணமாக மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் நிர்வாண உணவு விடுதி ஒன்று தொடங்கப்பட்டது.   இந்த உணவு விடுதியில் நிர்வாணமாக ஆண்களும் பெண்களும் மடியில் உணவை வைத்து உணவு அருந்தி மகிழ்ந்தனர்.

அடுத்ததாக இந்த இயற்கை ஆர்வலர்கள் இந்த வருட இறுதியில் நிர்வாண இரவு விடுதி ஒன்றை அமைக்க உள்ளனர்.

இந்த நிலையில்தான் குறிப்பிட்ட அருங்காட்சியகத்துக்கு நிர்வாணமாக வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் நிர்வாணமாக அருங்காட்சியகத்துக்கு வந்து அங்குள்ள பொருட்களை கண்டுகளிக்கின்றனர்.