காஷ்மீர்,
காஷ்மீர் மாநிலத்தில் பொதுமக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த இளைஞர் ஒருவரை ராணுவத்தினர் கவசமாக ராணுவ ஜீப்பின் முன்பகுதியில் கட்டிவைத்து சென்றனர். அதைத்தொடர்ந்து இந்த செயலை செய்த ராணுவ அதிகாரிக்கு விருதும் கொடுக்கப்பட்டது.
இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், ராணுவ ஜீப்பில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஃபரூக் அஹமத் தார் என்பவர், மேஜர் லீடுல் கோகாய் அவர்களுக்கும் ராணுவ விருது வழங்கியது தவறு என மாநில மனித உரிமைக் கழகத்திடம் புகார் அளித்துள்ளார்
ஃபரூக் பீர்வா மாவட்டத்தில் சில் என்னும் கிராமத்தில் வசித்து வரும் 26 வயது இளைஞர்
எம்பிராய்டரி தொழில் நடத்திவரும் ஃபரூக் கடந்த ஏப்ரல் 9ம் தேதி வாக்களித்து விட்டு வரும் வழியில் ராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு மேஜர் லீடுல் கோகாய் பயணித்த வாகனத்தில் ஒரு மனித கவசமாக கட்டி வைக்கப் பட்டார்.
இது 1949 ஜெனிவா யுத்த வரைமுறைக்கு எதிரானதாகும்
மேஜர் கோகாய்க்கு இந்த விருது வழங்கப்பட்டதை உள்ளூர் செய்திதாள்களின் மூலம் அறிந்துக் கொண்ட ஃபரூக் இது சர்வதேச யுத்த விதிகளுக்கு மாறானது, தான் ஏன் ஒரு மிருகத்தைப் போல ஜீப்பில் கட்டி வைத்து துன்புறுத்தப்பட்டேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து மனித உரிமைகள் கழகத்தில் புகார் கூறி உள்ளார்.