சென்னை

சாய்பாபா பக்தர்களுக்கு ஓர் நற் செய்தி

ஷீரடி சாய்பாபா வின் பக்தர்கள் உலகெங்கும் உள்ளனர்.   அனைவரும் அவரைக் காணாமலே அவர் மீது பக்தி கொண்டுள்ளனர்.   தமிழ்நாட்டிலும் அவருக்கு பல கோயில்கள் உள்ளது.  தமிழக தலை நகர் சென்னை மயிலாப்பூரில் அவருடைய கோயில் உள்ளது.  அங்கு தினமும் பல பக்தர்களும் வருகை தருவதும் வியாழக்கிழமை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதும் குறிப்பிடத்தக்கதே.

இப்போது முதல் முறையாக அவருடைய பாதுகைகள் சென்னைக்கு எடுத்து வரப்படுகின்றது.   இது பக்தர்களின் தரிசனத்துக்காக மைலாப்பூர் கோயிலில் வைக்கப்பட உள்ளது.   வரும் நவம்பர் 8ஆம் தேதி காலையில் இருந்து நவம்பர் 9ஆம் தேதி இரவு வரை அந்த பாதுகைகள் பொதுமக்கள் தரிசனத்துக்கு வைக்கப்படும்.  அது தவிர மைலாப்பூரின் நான்கு மாட வீதிகளிலும் நவம்பர் 9 ஆம் தேதி அன்று மாலை 7 மணியில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படும்.

இந்த அரிய வாய்ப்பை பயன் படுத்தி சாய்பாபா பக்தர்கள் அவருடைய அருளை பெருமாறு அகில இந்திய சாய் சமாஜ் வேண்டுகோள் விடுத்துள்ளது.