சென்னை.
சென்னை எழும்பூர் அருகே இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ரம்ஜான் நோன்புக்காக போடப்பட்ட கொட்டகையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.
எழும்பூர் அருகே உள்ள புதுப்பேட்டை ஆதித்தனார் சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. வீட்டின் மாடியில் ரம்ஜான் நோன்பு வழிபாட்டு கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
புதுப்பேட்டை வீரபத்திரன் தெருவில் உள்ள மூன்று மாடிக்கட்டிடத்தின் மாடியில் ரம்ஜான் நோன்பு வழிபாடு நடத்துவதற்காக கொட்டகை போடப்பட்டுள்ளது.
இந்த கொட்டகையில் இன்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ அணைத்தனர்.