சென்னை: அரபிக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இதனால் வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்ட வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், கேரளாவின் வடபகுதியில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் எந்த பாதிப்பும் இருக்காது என்றவர்,
அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி நாளை அந்தமானை நோக்கி நகரும். இதனால், வட கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார்.
மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றவர், வடகடலோரம், உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இது தினங்களில் மழை படிப்படியாக குறையும் என்றதடுனு, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை, அதுபோல அடுத்து வரும் 5 தினங்களுக்கு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகாது என்றும் கூறினார்.