சென்னை:

சென்னை அருகே உள்ள கேளம்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில், சைவ உணவுக்கு பதிலாக  அசைவ உணவு வழங்கப்பட்டதால் கோபமடைந்த வழக்கறிஞர், ஓட்டல்  ஊழியர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.

இந்த விவகாரத்தில் துப்பாக்கி சூடு நடத்திய வழக்கறிஞரும், அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ன்னையை சேர்ந்த வழக்கறிஞர் மாதவன் என்பவர், கேளம்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்ததாக வும், அப்போது அவர் சைவ உணவு கேட்ட நிலையில், அவருக்கு ஓட்டல் ஊழியர் அசைவ உணவு வழங்கிய தாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த வழக்கறிஞர் மாதவன், அந்த ஊழியர் மீது தனதுதுப்பாக்கியால் சுட்டதாகவும், ஆனால் குண்டு வழி தவறி அருகிலிருந்த காரின்மீது பட்டு, காரின் கண்ணாடி சேதமடைந்தாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஓட்டல் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் வழக்கறிஞர் மாதவன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது உதவியாளர் முத்துராக்கையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின்போது மாதவனிடம் இருந்து 49 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், நிகழ்வு நடைபெற்றபோது, வழக்கறிஞர்  மாதவனுடன் ஓட்டல் அறையில் தங்கியிருந்த பெண்மணியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.