பின்லாந்து நாட்டில் சூப்பர் மார்க்கெட்டில் திருடிய திருடனை வளைத்துப் பிடித்த பெண் ஊழியர் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ‘ஷாப் லிப்ட்டிங்’ என்று சொல்லப்படும் சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர் போல் நுழைந்து தங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு காசு கொடுக்காமல் எஸ்கேப் ஆவது என்பது சாதாரணமான ஒன்று.

இதைத் தடுக்க சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஸ்கேனர்கள் என்று பல்வேறு தொழில்நுட்பங்களை அதிகரித்தபோதும் துப்பாக்கியைக் காட்டி பொருட்களைத் தூக்கிச் செல்வது, தடுக்கும் ஊழியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலேயே ஷாப் லிப்ட்டிங் அதிகளவு நடைபெறும் பின்லாந்து நாட்டின் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பெண் ஊழியர் ஒருவர் திருடர்களை சாதுரியமாக வளைத்துப் பிடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உயிரைப் பணயம் வைத்து என்னதான் விசுவாசமாக வேலை செய்தாலும் அந்நாட்டு சட்டப்படி நடந்துகொள்ளவில்லை என்றும் வாடிக்கையாளரை தாக்கினார் என்றும் அவர் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டுவருகிறது.