சென்னை

திருவல்லிக்கேணி சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. 

இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீபிடித்து எரிந்தது.  இதனால் அந்தப் பகுதியே பரபரப்புக்குள்ளானது.’ 

அந்தக்  காரில் நெருப்பு பரவியதும், உள்ளே இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கி உள்ளனர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நெருப்பை அணைத்தனர். ஆயினும் அந்தக் கார் முழுவதுமாக எரிந்துள்ளது.