சென்னை: தமிழ்நாட்டில் வரும் வியாழக்கிழமை முதல் சென்னை உள்பட பல பகுதிகளில் மிக மிக கொடூரமாக வெப்ப அலை வீசும் என்றும், பல மாவட்டங்களில் 104 டிகிரியை தாண்டி அனல் வீசும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆண்டு, கோடை காலம் தொடங்கியது முதல், வெப்ப அலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கிறது. தற்போதைய சூழலே அக்னி நட்சத்திரம் வெயிலை தாண்டும் வகையில் உள்ளது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது, நடப்பாண்டு கோடைக்காலம் தமிழகத்தில் மிக உக்கிரமாகவே இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதலாகவே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், காலை 9 மணிக்கு கூட வெளியே போக முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. அதிக வெப்பத்தின் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே தயங்குகின்றனர். இந்த நிலையில், வரும் வியாழக்கிழமை முதல் சென்னை உள்பட பல பகுதிகளில் மிக மிக கொடூரமாக வெப்ப அலை வீசும் என்ற தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
வியாழக்கிழமை முதல் தமிழகத்தில் வெப்ப அலை உதைக்கிறது. சென்னை (மீனா) தனது முதல் 40 C ஐ இந்த வாரம் கழித்து பார்க்கலாம். டெல்டா மற்றும் முழு வட தமிழகமும் மயங்கும். உட்புற தமிழகத்தில் சில இடங்களில் 42 C கடக்கலாம்
—————-
தென் தமிழகம் (தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி, ராமநாதபுரம் பகுதிகளில் இன்று மழை பெய்யும்)
வெப்பநிலை மீண்டும் உயர தொடங்கும் ஈரோடு நாமக்கல் சேலம் கரூர் பெல்ட் மீண்டும் 40 C-ஐ தொடும்
இந்த வாரம் தேர்தல் நேரத்தில் சென்னையில் முதல் 40 C பார்க்கலாம்.
——————-
இன்றைய நிலவரப்படி சென்னை இன்டீரியர் 36 ஆக இருக்கும், கடற்கரை அருகில் 35 C ஆக இருக்கும்., தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் மழை பெய்யும். அதே சமயத்தில், மழை பெய்து முடித்த ஈரோடு உள்ளிட்ட இடங்களில் அதிக வெப்பம் இருக்கும். நாமக்கல், சேலம், கரூர் ஆகிய பகுதிகளில் இன்று 104 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் இருக்கும்.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.