சிவகங்கை: கீழடியில் நடைபெற்று வரும் 8-ம் கட்ட அகழாய்வில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது டி.என்.ஏ. சோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இன்று கீழடி நாகரிகம் பற்றி இன்று உலகமே பேச ஆரம்பித்துள்ளது. ஆனால், இந்திய அரசின் தொல்லியல் துறையால் முதலில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்த நிலையில் பல்வேறு வழக்குகள் காரணமாக, பின்னர்த அது வெளியிடப்பட்டது. அதன்படி, கீழடி நாகரிகம் சமூகமாக 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த  தமிழ் சமூகத்தின் அடிப்படை இருந்திருக்கிறது என்பது ஏற்கனவே தெளிவானது. இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் 8வது கட்ட அகழ்வாய்வில் மேலும் பல அரிய பொருட்கள் கிடைத்து, தமிழ்ச்சமுதாயத்தின் புகழை மேலும் பறைசாற்றி வருகின்றன.

தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் கீழடி அருகே உள்ள கொந்தகையில் நடைபெற்று  8ம் கட்ட அகழாய்வில்  த கீழடியில் எட்டு குழிகளும், அகரத்தில் ஆறு குழிகளும், கொந்தகையில் நான்கு குழிகளும் தோண்டப்பட்டு 800க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.

இதில் கொந்தகை தளத்தில் அகழ்வாய்வு நடைபெற்ற வரும் நான்கு குழிகளில் இருந்து 54 முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டுள்ளன. இதில் ஒருசில முதுமக்கள் தாழிகள் தவிர மற்றவை சேதமடைந்த நிலையிலேயே கிடைத்தன.  nமலும் அந்த முதுமக்கள் தாழிகளுக்குள் மண்டை ஓடு, கை, கால் எலும்புகள், உணவு குவளை, தண்ணீர் குவளை உள்ளிட்ட 20 பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டன.

முதுமக்கள் தாழிகளினுள் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த தொல்லியல் ஆய்வாளர்கள் வியப்படைந்தனர். இந்த மண்டை ஓடு எந்த காலத்தைச் சேர்ந்தது என்பது குறித்து அறிய, முதன் முறையாக அமெரிக்க பல்கலைகழக நிபுணர்கள் குழுவும் களமிறங்கியுள்ளது.இவற்றை மரபணு பரிசோதனைக்காக எடுத்து செல்லப்படுகிறது.

சேதமடையாத தாழிகளில் உள்ள பொருட்களை ஆய்விற்கு உட்படுத்தினால் மட்டுமே மரபணு சோதனை முடிவுகள் தெளிவாக கிடைக்கும், எனவே சேதமடையாத தாழிகளை கணக்கிட்டு அதனை திறக்க தொல்லியல் துறை முடிவு செய்தது. தமிழக தொல்லியல் துறை ஆணையாளர்(பொறுப்பு) சிவானந்தம், இணை இயக்குனர் (கீழடி அகழாய்வு) ரமேஷ், மதுரை காமராசர் பல்கலை கழக மரபணு பிரிவு பேராசிரியர் குமரேசன் உள்ளிட்டோர் முன்னிலையில் 114வது தாழி திறக்கப்பட்டது. மூன்றரை அடி உயரம் கொண்ட இந்த தாழியின் மேற்பகுதி திறக்கப்பட்டு உள்ளே உள்ள பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டன.

அமெரிக்கா ஹார்வார்டு பல்கலைகழக பேராசிரியர் டேவிட், சிகாகோ பல்கலைகழக பேராசிரியை மானஸா உள்ளிட்டோரின் நேரடி கண்காணிப்பில் ஆய்வுபணிகள் நடந்து வருகின்றன.