அமெரிக்க அரசின் இணையதளங்களில் ஊடுருவிய  ரஷ்யா: ஸ்நோடன் அதிரடி தகவல்

Must read

மாஸ்கோ:
மெரிக்க அரசின் இணையதளங்களில் ஊடுருவிய விவகாரத்தில் ரஷ்யாவுக்கு தொடர்பு உண்டு என்ற அதிர்ச்சி தகவலை எட்வர்ட் ஸ்நோடன் வெளியிட்டுள்ளார்.
1-a
அமெரிக்காவின் உளவுப்பிரிவான தேசிய பாதுகாப்பு ஏஜென்சியில் ஆய்வளாராக இருந்தார் எட்வர்ட் ஸ்நோடன். மூன்று ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க அரசின் ராணுவ ரகசியங்கள் பலவற்றை வெளியிட்டார்.  இதனால் அமெரிக்க அரசு அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டை முன் வைத்தது.  அந்நாட்டு அரசால் குற்றம்சாட்டப்பட்டார்.  அவரோ, “அமெரிக்க அரசின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளையே அம்பலப்படுத்துகிறேன்” என்று தெரிவித்தார்.   தற்போது ரஷ்யாவில் வாழ்ந்து வரும் அவர், ரஷ்யா குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில், அமெரிக்க அரசின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டன.  இது குறி்த்து ஃபைனான்ஷியல் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின்போது, அமெரிக்கா அரசாங்கத்தின் இரு பெரிய இணையதளங்கள் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் இந்த சம்பவத்திற்கு பின்னணியில் ரஷியா இருப்பதாக பலரும் கருதுவதாகவும், ஜனநாயக கட்சியினரின் மின்னஞ்சல்கள் கசிந்தததற்கு ரஷியா காரணமாக இருக்கலாம் என்பதை தானும் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் அமெரிக்க நாட்டிற்கு விசுவாசமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

More articles

Latest article