தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமெரிக்க நியூயார்க் நகரின் ரோட்டரி சங்கம் “PAUL HARRIS FELLOW” என கவுரவித்து உள்ளது. இதை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரத்தை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும். ரோட்டர் இண்டர்நேஷனல் அமைப்பானது, குடிநீர், நோய், சுகாதாரம், நோய் தடுப்பு, தாய் சேய் நலம், சுற்றுச்சூழல், உலக சமாதானம் போன்ற துறைகளில் சிறப்பான முறையில் சேவையாற்றுபவர்களுக்கு “PAUL HARRIS FELLOW” என அழைத்து கவுரவித்து வருகிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சேவையை பாராட்டி, அவருக்கு “PAUL HARRIS FELLOW” என கவுரப்படுத்தி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.