பெங்களுரூ: 
58 வயதாகும் சிவகுமார் தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தலைவராக  முக்கிய தலைவர்கள் முன்னிலையில் பதவி ஏற்றுள்ளார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக சிவக்குமார் பதவியேற்றுக்கொண்டார். உராடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் கர்நாடக முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான சித்தராமையா உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கட்சி தலைமை அலுவலகத்தில் 5 பேர்தான் பங்கேற்க வேண்டும் என்ற ஊரடங்கு விதிமுறை அமலில் இருப்பதால் மாநிலம் முழுவதும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் இந்த பதவியேற்பு விழாவை கண்டுகளிக்கும் விதமாக மொத்தம் 7600 இடங்களிலும் சமூக இடைவெளியோடு நேரலை ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக லாடாக் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற விழாவில் கர்நாடக காங்கிரஸ் தலைவராக சிவக்குமார் பதவியேற்றுக்கொண்டார். கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்ட சிவக்குமார் ஊரடங்கு காரணமாக தற்போதுதான் பதவியேற்றுக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.