சென்னை:
கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில்சிக்கித்தவிக்கும் தமிழர்கள் வந்தா பாரத் திட்டத்தின் மூலம் எப்போது அழைத்து வரப்படுவார்கள்? என மத்தியஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுமா? எப்போது அழைத்து வரப்படுவார்கள் என்பது குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டனர்.
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின்கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். ஆனால், தமிழக்ததில் கொரோனா தொற்று அதிகமாகி உள்ளதால், விமானங்களை தமிழகத்தில் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் கடந்த விசாரணையின்போது பல்வேறு கேள்விகளை எழுப்பி, மத்தியஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வந்தே பாரத் திட்டத்தின்படி இயக்கப்பட்ட விமானங்கள், பயணிகள் குறித்து மத்திய அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வெளிநாடுகளில் இருந்து இதுவரை 14065 தமிழர்கள் அழைத்து வரப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 40433 பேர் தமிழகம் திரும்ப பதிவு செய்திருப்பதாகவும், அழைத்து வரப்பட்டவர்கள் போக மீதமுள்ள 26368 பேரை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையின்போது ஆஜரான திமுக வழக்கறிஞர் மத்தியஅரசு மீது குற்றம் சாட்டினார். ஆனால், தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எத்தனை விமானங்கள் வேண்டுமானாலும் இயக்கலாம் என்றும் அதற்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த முறை பிறப்பிக்கப்பட உத்தரவை முழுமை யாக அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட்டு. வழக்கு விசாரணையையும் ஜூன் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.