இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பின் (சிஐஐ) மீடியா மற்றும் பொழுதுபோக்கு தென்னிந்தியப் பிரிவு தலைவராக சத்யஜோதி பிலிம்ஸைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளரான டி.ஜி. தியாகராஜன் தேர்வாகியுள்ளார்.
40-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். சின்னத்திரையில் 7,500-க்கும் அதிகமான தொலைக்காட்சித் தொடர்களின் எபிசோட்களைத் தயாரித்துள்ளார்.
இதற்கு முன்பு அவர், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் செயலாளராகவும் இருந்துள்ளார்.
புதிய பதவிக்காக திரையுலகப் பிரபலங்கள் பலரும் தியாகராஜனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.