சென்னை:
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் ஜெயந்தியின் விடுமுறை சந்தேகத்தை எழுப்புகிறது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி பதிவிட்டுள்ள டிவிட்டில், கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் வேளையில், கொரோனாவுக்கான சிகிச்சை வழங்குவதில் மிக முக்கிய பங்காற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்.எம்.சி) மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் ஆர்.ஜெயந்தி அவர்கள் திடீரென விடுமுறையில் சென்றிருக்கிறார்.
அதற்கான காரணம் என்னவென்று தெளிவாகக் கூறப்படவில்லை. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் குழப்பம் நிலவிவரும் சூழலில், இந்த விடுமுறை பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது. என பதிவிட்டுள்ளார்.
அத்துடன் ஜெயந்திக்கு பதிலாக டாக்டர் நாராயணபாபு பணி நியமனம் தொடர்பான ஆணையின் நகலையும் வெளியிட்டு உள்ளார்.