கான்பெரா: ஆஸ்திரேலிய நாட்டில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட சிலருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், இத்தகையப் போராட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் கருப்பினத்தவரான கருப்பினத்தவரான 46 வயதான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் காவல்துறையால் கொல்லப்பட்டதையடுத்து, அமெரிக்கா மட்டுமின்றி, உலகில் பலநாடுகளிலும் நிறவெறிக்கு எதிரானப் போராட்டங்கள் நடைபெற்ற வருகின்றன.

ஆஸ்திரேலியாவிலும் நிறவெறிக்கு எதிரானப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் நடந்த இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாகாண அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து அந்நாட்டு மக்களை இனவாதப் போரட்டம் உள்ளிட்ட எந்தப் போராட்டங்களிலும் கலந்துகொள்ள வேண்டாமென ஆஸ்திரேலிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், “மக்கள் யாரும் இம்மாதிரியான போராட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்ற தெளிவான செய்தி கிடைத்துள்ளது. ஏனெனில், இது மருத்துவ அறிவுரைகளுக்கு எதிரானது. மக்கள் யாரும் இம்மாதிரியான போராட்டங்களில் கலந்துகொள்ளக் கூடாது” என்றுள்ளார்.

[youtube-feed feed=1]