”குடி”மக்களிடம் கொரோனா வரி கேட்கும் பஞ்சாப்…..
பஞ்சாபில் நான்காம் கட்ட ஊரடங்கு ஆரம்பமாகும் போதே பல மாநிலங்கள். மதுக்கடை கதவுகளை திறந்து விட்டன.
சொல்லி வைத்த மாதிரி எல்லா மாநிலங்களும், மதுவின் விலையை (கலால் வரி) உயர்த்தியுள்ளன.
டெல்லி மற்றும் ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களும் வரலாற்றில் இதுவரை இல்லாத படி 75 % அளவுக்கு மதுவுக்கு வரி போட்டன.
பஞ்சாப் மாநிலம் மிகவும் காலதாமதமாக 5 ஆம் கட்ட ஊரடங்கு ஆரம்பித்த நேற்றைய தினம் , மாநிலத்தில் மதுக்கடைகளை மீண்டும் திறந்துள்ளது.
இது தொடர்பாக ,குடிமகன்களுக்கு கசப்பும், இனிப்பும் கலந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார், பஞ்சாப் முதல் –அமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங்.
காலை 7 மணிக்குத் திறக்கப்படும் கடைகள் மாலை 7 மணி வரை திறந்திருக்கும்.
அதாவது, தினசரி 12 மணி நேரம், பாட்டில் வாங்கிக் கொள்ளலாம்.
இது இனிப்பு.
கசப்பு என்ன?
விலை உயர்வு.
பாட்டிலுக்கு அதன் ரகத்துக்கு ஏற்றபடி 2 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை ‘கொரோனா வரி’’ என்ற புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் வருவாய் முழுக்க, முழுக்க கொரோனா தொடர்பான செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளார், கேப்டன் அமரீந்தர் சிங்.