புதுடெல்லி: 
ரபிக் கடலில் உருவாகியுள்ள புயல், அடுத்த சில நாட்களில் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மகாராஷ்டிராத்தின் வடக்கு பகுதி மற்றும் குஜராத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் நாளை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சூறாவளி குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வகைப் படுத்தியுள்ள எட்டு நிலைகளில், தற்போது உருவாகியுள்ள புயல், குறைந்த அழுத்த பகுதி, தாழ்வுழுத்தம் மற்றும் சூறாவளி எனக் குறிப்பிட்டுள்ளது. ஒருவேளை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை படிப்படியாக அதிகரித்து புயலாக மாறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு நிசார்கா புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. புயல் சூறாவளி புயலாக மாறினால் மட்டுமே அதற்கு பெயரிடப்படுவது வழக்கமாகும்.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புயலுக்கு முந்தைய கணிப்பில், இந்த புயல் மகாராஷ்டிராவின் வடக்கு பகுதி மற்றும் குஜராத்தின் தெற்கு கடலோர பகுதியில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக லட்சத்தீவு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இந்த காலநிலை மாற்றத்தால் இன்று கோவா மற்றும் கொங்கன் பிராந்தியத்தில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மகாராஷ்டிராவின் கடலோரப்பகுதிகள், குஜராத்தின் தெற்குப் பகுதி  மற்றும் யூனியன் பிரந்தியங்களான தாதர் மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டியூ ஆகிய இடங்களிலும் இன்று மழை  பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அடுத்த சில நாட்களுக்கு இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கடலின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும்  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிகை விடுத்துள்ளது.  இருந்தப் போதும் இந்த புயல் காரணமாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது போன்ற எச்சரிக்கை எதையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.