Skip to content
  • Fri. Sep 25th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

எங்கள் உயிரை விட மாணவர்கள் உயிர்தான் முக்கியம்… அமைச்சர் செங்கோட்டையன்

May 29, 2020
கோபிசெட்டிப்பாளைம்:
எங்கள் உயிரைவிட மாணவர்களின் உயிரே முக்கியம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில்,  10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ந்தேதி நடைபெறும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.  ஊரடங்கு மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்ப்பு நிலவுவதால், குறிப்பிட்ட நாளில் தேர்வு நடக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,  தமிழக முதல்வர்  அனைத்து துறையினருடன் இணைந்து முடிவு செய்த பின்னர் தான் 10-ம் வகுப்பு தேர்வு சம்பந்தமாக அட்டவணைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழக அரசு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது. மாணவர்கள் யாரும் பயப்பட தேவையில்லை. அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடு செய்து தரப்படும். எங்கள் உயிரை விட மாணவர்கள் உயிரே மேலானது.
தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு அனைத்து வித ஏற்பாடுகளையும் பள்ளி கல்வித்துறை செய்துள்ளது.
குறிப்பாக விடுதிகள் திறப்பதற்கும், மாணவர்கள் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் வரலாற்றில் முதன் முறையாக மாணவர்கள் எந்த பள்ளியில் படித்தார்களோ அந்த பள்ளிகளிலே தேர்வு எழுதலாம். இந்த ஆண்டு  12,864 மையங்களில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
ஆன்லைன் வகுப்புகள் சம்பந்தமாக எந்த குழப்பமும் வேண்டாம். தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றுதான் கூறி உள்ளோம்.
கொரோனா பாதிக்கப்பட்ட நேரத்தில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டும் தான் படிக்க முடியும். எனவே ஆன்லைன் மூலம் பாடம் எடுப்பதில் எந்த ஐயப்பாடும் வேண்டாம்.
தமிழகத்தில் பள்ளி திறப்பு சம்பந்தமாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Post navigation

சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா…
ஸ்டாலின் தலைமையில் 31ந்தேதி மாலை அனைத்துக்கட்சிக் கூட்டம்… திமுக அறிவிப்பு

Related Post

தமிழ் நாடு

வீட்டுக்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு தமிழக அரசு மானியம்… சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்!

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer