Skip to content
  • Fri. Sep 25th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

சென்னையில் கொரோனா நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும்… தமிழக அரசு

May 28, 2020

சென்னை:

சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாகி வரும் நிலையில், கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் தீவிரமாக பரவி வருகிறது. அதே சமயம் மற்ற மாவட்டங்களில் ஊரடங்கில் இருந்து  பல்வேறு  தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பி வருகின்றன. அதன்படி கடந்த 19ந்தேதி முதல் அழகு நிலையங்கள், முடி திருத்தும் கடைகள் சென்னை தவிர்த்து மற்ற பகுதிகளில் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கக் கோரி முடி திருத்துவேர் சங்கம் சார்பில் சென்னை  உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான தமிழகஅரசு வழக்கறிஞர்,  சென்னையில் கொரோனா தற்று பரவல் தொடர்பான  கள நிலவரங்களை ஆய்வு செய்து சலூன் கடைகள் திறக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளது.
இதனையடுத்து,  தமிழக அரசு மே 28ம் தேதி விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை  ஜூன் 8ஆம் தேதி நீதிபதி தள்ளிவைத்தார்.

Post navigation

பிளஸ்-2 வேதியியல் பாடத்தில் 3 மதிப்பெண்கள் போனஸ்… அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு
சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆன #SpeakUpIndia பிரச்சாரம்

Related Post

தமிழ் நாடு

வீட்டுக்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு தமிழக அரசு மானியம்… சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்!

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer