ரஷ்யாவின் தொலைதூர பகுதியான கிழக்கு சுகோட்கா பிராந்தியத்தில் உள்ள விமான நிலையத்தில் செவ்வாயன்று இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த நான்கு பேரும் கொல்லப்பட்டதாக மாநில கவர்னர் தெரிவித்தார்.
ரஷியாவின் கிழக்கு பகுதியில் சுகோட்கா மாநிலம் உள்ளது. இது தன்னாட்சி பெற்ற மாகாணம் ஆகும். இங்கிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட ராணுவத்துக்கு சொந்தமான ‘எம்.ஐ.8’ ரக ஹெலிகாப்டர் விமானம் தரையிறங்க முயன்றபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாது.
இந்த ஹெலிகாப்டரில் 3 வீரர்களும், ஒரு தொழில்நுட்ப வல்லுனரும் இருந்ததாகவும், அவர்கள் 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.