Skip to content
  • Fri. Sep 25th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

தமிழகத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடக்கம்…

May 26, 2020

சென்னை:

தமிழகத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடங்குவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. ஆனால், சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ளதால், சென்னையில் விடைத்தாள் திருத்தும் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது. மார்ச் 24ந்தேதி கடைசி தேர்வு முடிவடைந்த நிலையில், அன்றுமுதல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால்  ஏராளமானோர் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு ஜூன் மாதம் மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்,   பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சுமார்  48 லட்சம் விடைத்தாள்கள், சென்னையை விடுத்து தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள  200 மையங்களில் சமூக விலகல் மற்றும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளின்படி  நாளை முதல் நடைபெறுகிறது. விடைத்தாள்கள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வருவதற்கு தேவையான பயண ஏற்பாடுகள், மையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளி விட்டு பணி செய்தல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது.“
12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்திய பின்னர், 11-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தப்படும். 15 நாட்களுக்குள் விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்படும். அதனைத் தொடர்ந்து ஜூன் இறுதியில்  தேர்வு முடிவு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post navigation

ஜூன் 1-ந் தேதி முதல் சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கம்?
இன்று (26/05/2020) மேலும் 646: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 17,728 ஆக அதிகரிப்பு

Related Post

தமிழ் நாடு

வீட்டுக்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு தமிழக அரசு மானியம்… சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்!

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer